நயன்தாரா என் டார்லிங், தேவதை: ரசிகரின் கேள்விக்கு அட்லி பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த பிகில் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று அந்த படத்தின் இயக்குனர் அட்லி, டுவிட்டர் இணையதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.
அந்த வகையில் ஒரு ரசிகர் ’நயன்தாரா கேரக்டர் குறித்து கூறுங்கள்’ என்று கேட்டபோது, ‘நயன்தாராவின் கேரக்டர் ஃபன், எமோஷன் மற்றும் இன்ஸ்பைரிங் ஆக இருக்கும் என்றும், அவங்க தான் படத்தின் தேவதை என்றும் மை டார்லிங் என்று பதிலளித்துள்ளார்.
அதேபோல் ஏஆர் ரஹ்மான் அவர்களுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து ஒரு ரசிகர் கேள்வி எழுப்பிய போது ’இந்த படத்தில் அவருடன் பணிபுரிந்தது மிகவும் அருமையான, மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றும், நீங்கள் கேட்ட பாடல்களை தவிர மேலும் இரண்டு எமோஷனல் பாடல் படத்தில் இருக்கின்றது என்றும், அந்த பாடல் வேற லெவல் மற்றும் வெறித்தனமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பிகில் படத்தில் உள்ள ராயப்பன், மைக்கேல், பிகில் ஆகிய கேரக்டர்களில் உங்களுக்கு பிடித்த கேரக்டர் எது? என்ற கேள்விக்கு பதிலளித்த அட்லி ’எப்பொழுதுமே ராயப்பன் கேரக்டர்தான்’ என்று கூறியுள்ளார்.
Unmayile vera level experience nanba!! Neenga ketta songs-a thavara innum 2 emotional songs padathule irukku. Adhu varra edam vera level #Verithanam!! expect the unexpected! #AskAtlee https://t.co/KO3HcoO6Je
— atlee (@Atlee_dir) October 24, 2019
full fun, emotion and inspiring! Avanga dhan movie le Angel! My darling! #AskAtlee https://t.co/mvuQ7QR0kf
— atlee (@Atlee_dir) October 24, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com