புதிய பிசினஸ் தொடக்க விழா.. முதல் பட ஹீரோவை மறக்காமல் அழைத்த நயன்தாரா

  • IndiaGlitz, [Saturday,September 30 2023]

லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா 9 ஸ்கின் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கிய நிலையில் அந்த நிறுவனத்தின் தொடக்க விழாவில் தனது முதல் பட நாயகனை மறக்காமல் உள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏற்கனவே திரைப்படங்களில் நடிப்பது, தயாரிப்பது மட்டுமின்றி பல தொழில்கள் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் புதிதாக 9 ஸ்கின் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கிய நிலையில் இந்த நிறுவனத்தின் தொடக்க விழா சமீபத்தில் மலேசியாவில் நடந்தது.

இந்த விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் நயன்தாராவின் முதல் பட ஹீரோவான சரத்குமார் கலந்து கொண்டார். தமிழில் நயன்தாரா நடித்த முதல் திரைப்படம் ’அய்யா’ என்ற நிலையில் இந்த படத்தின் நாயகன் ஆன சரத்குமாரை மறக்காமல் இந்த விழாவிற்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் இந்த விழாவில் கலந்து கொண்டார் என்பதும் இந்த விழா குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது