அப்படி எதை இழந்தார் நயன்தாரா?  இன்ஸ்டா ஸ்டோரியால் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Thursday,March 07 2024]

நடிகை நயன்தாரா ’நான் இழந்து விட்டேன்’ என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் செய்துள்ள பதிவு காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நடித்து வரும் நயன்தாரா இப்போதும் கூட பிசியான நடிகையாக இருக்கிறார் என்பதும் அவர் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில். சமீபத்தில் தான் அவர் இன்ஸ்டாகிராமில் இணைந்த நிலையில் அவருக்கு ஒரு சில மாதங்களில் சுமார் 8 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர் என்பதும் அதில் தான் நடிக்கும் திரைப்படங்கள், தன்னுடைய நிறுவனங்களின் விளம்பரங்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருவார்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் ’நான் முக்கியமான ஒன்றை இழந்து விட்டேன்’ என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ள நிலையில் அவர் எதை இழந்தார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் அவர் குளிர்பானம் ஒன்றின் விளம்பர அம்பாசிடராக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் இந்த பதிவும் வேறு ஏதாவது விளம்பரத்திற்காக தான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இருப்பினும் இன்னும் ஓரிரு நாளில் அவர் எதை இழந்தார்? எதற்காக இழந்தார்? என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.