ஒவ்வொரு பெண்ணுக்கும் மகிழ்ச்சியான மாதவிடாய் சுழல்.. நயன்தாரா கொடுத்த டிப்ஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் காலம் என்பது ஒரு அசௌகரியமான காலம் என்று கூறப்படும் நிலையில் மகிழ்ச்சியான மாதவிடாய் சுழல் ஏற்படுவது எப்படி என்பது குறித்து நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்று முன் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரு பெண் ஒவ்வொரு மாதமும் பலவிதமான நிலையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக பெண்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் அதிகம். அந்த நேரத்தில் நேசிப்பதற்கும் ஆறுதல்படுவதற்கும் பெண்கள் ஏங்குவார்கள்.
நான் பெமி9 உபயோகித்து நல்ல பலன் கண்டு உள்ளேன், அதேபோல் உங்களுக்கு செளகரியமானதை தேர்வு செய்யுங்கள். இது என்னுடைய தயாரிப்பு என்பதற்காக நான் கூறுவதாக நினைக்க வேண்டாம், இது எனக்கு நன்றாக பயன்பட்டதால் தான் உங்களுக்கும் பரிந்துரை செய்கிறேன்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரச்சனை இல்லாத, செளகரியமான மாதவிடாய் சுழல் அமைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். மாதத்தின் மற்ற நாட்களைப் போலவே மாதவிடாய் நேரத்திலும் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் ஒவ்வொரு பெண்ணும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.
நடிகை நயன்தாரா கடந்த சில மாதங்களுக்கு முன் பெமி9 என்ற சானிட்டரி நாப்கின் தயாரிப்பை வெளியிட்டார் என்பதும் இதை அவ்வப்போது அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளம்பரப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இதுவும் ஒரு விளம்பரமாகவே பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments