நயன்தாராவின் 'நெற்றிக்கண்' குறித்த புதிய அப்டேட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலந்த் ராவ் இயக்கி வரும்‘நெற்றிக்கண்’என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படம் ‘பிளையண்ட்’ என்ற கொரிய மொழி படத்தின் ரீமேக் என்பதும், இந்த படத்தில் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
விபத்தில் பார்வை இழந்த ஒரு பெண், கொடுரமான சீரியல் கில்லரை தன்னுடைய அறிவாற்றல் மூலம் எப்படி கண்டு பிடிக்கின்றார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாக இயக்குனர் மிலந்த் ராவ் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டுக்கு தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படம் கிரிஷ் இசையில், கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.
A glimpse of the action behind the scenes of #Netrikann. Second schedule starts today! #Nayanthara @VigneshShivN @Rowdy_Pictures pic.twitter.com/PK3KDq7XRV
— Milind Rau (@Milind_Rau) October 17, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments