ஓடிடியில் நயன்தாராவின் அடுத்த படம்: ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் ஓடிடியில் ரிலீஸ் ஆவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படங்களில் ஒன்று ‘நெற்றிக்கண்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்தது. இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போதைக்கு திரையரங்குகள் திறக்கும் வாய்ப்பு இல்லை என்பதால் ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் இந்த தகவல் தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ ஒளிபரப்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
நயன்தாராவின் முந்தைய தமிழ் திரைப்படமான ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படமும் டிஸ்டி ஹாட்ஸ்டாரில் தான் வெளியானது என்பதும் அந்த படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘நெற்றிக்கண்’ படத்தை மிலிந்த் ராவ் என்பவர் இயக்கியுள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே ’அவள்’ உள்ளிட்ட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் சிவனின் ‘ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற ‘இதுவும் கடந்து போகும் என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout