படத்துல இதெல்லாம் பார்க்க முடியாது: நயன்தாராவின் வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,August 11 2021]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’நெற்றிக்கண்’ திரைப்படம் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த டிரைலருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வை தெரியாத மாற்றுத்திறனாளியாக நடித்துள்ள நயன்தாராவின் நடிப்பு, வில்லன் வேடத்தில் மிரட்டலாக நடித்து இருக்கும் அஜ்மல் மற்றும் பின்னணி இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக அமைந்து உள்ள இந்த படத்தை மிலிந்த் ராவ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ’அவள்’ என்ற திகில் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் நயன்தாராவின் இன்னொரு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஹாட்ஸ்டார் சமூகவலைதளத்தில் சற்றுமுன் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த சில வீடியோ காட்சிகளை வெளியிட்டு உள்ளது. படத்தில் இதெல்லாம் பார்க்க முடியாது என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 13ஆம் தேதி ’நெற்றிக்கண்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.