விக்னேஷ் சிவனின் அடுத்த படத்திலும் மாற்றுத்திறனாளியாகும் நயன்தாரா!

  • IndiaGlitz, [Tuesday,September 17 2019]

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்த நிலையில் அவருடைய அடுத்த படத்திலும் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார்.

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார். மேலும் இந்த படம் பிளைண்ட்’ என்ற கொரிய மொழி படத்தின் ரீமேக் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

விபத்தில் பார்வை இழந்த பெண் ஒருவர், கொடுரமான சீரியல் கில்லரை எப்படி கண்டு பிடிக்கின்றார் என்பதுதான் ‘பிளைண்ட்’ படத்தின் கதை. கொரிய மொழியில் வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து சீனா, ஜப்பான் மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இந்த படம் தமிழிலும் ரீமேக் செய்யப்படுகிறது.

மிலந்த் ராவ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது. கிரிஷ் இசையில் கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவில் லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தில் நயன்தாராவின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் அதிக காட்சிகள் இருப்பதால் இந்த படம் நயன்தாராவுக்கு மேலும் ஒரு முக்கிய படமாகவும் வெற்றிப்படமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தமிழில் முதல்முறையாக 'புதுவசந்தம்' என்ற படத்தை தயாரித்தது.

கடைசியில எது ஜெயிக்கும்... சிங்கமா? நரியா? 'மாஃபியா' டீசர் விமர்சனம்

'துருவங்கள் 16' என்ற ஹிட் படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் அடுத்த படம் 'மாஃபியா'.

 ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகண்ணா, கேதரின் தெரசா இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில்!

பிரபல நடிகைகளான  ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகண்ணா, கேதரின் தெரசா ஆகிய மூவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர் என்ற செய்தி ஏற்கன்வே தெரிந்ததே.

வேற வழியில்ல குருநாதா! சாண்டி நாமினேட் செய்த இருவர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாமினேஷன் படலம் நடந்து வருகிறது. இதுவரை மோசமாக விளையாடியவர்களை நாமினேஷன் செய்த போட்டியாளர்கள் தற்போது இறுதிக்கட்டத்தில்

கமல்ஹாசன் கருத்துக்கு காயத்ரி ரகுராம் பதிலடி!

இந்தி எதிர்ப்பு என்பது தமிழகத்தில் இன்று நேற்றல்ல, கடந்த ஐம்பது ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்தி எதிர்ப்பை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திய கட்சிகளும் உண்டு.