நரிக்கு ஆடு தோண்டிய குழி: நயன்தாராவின் 'நெற்றிக்கண்' டீசர்!

  • IndiaGlitz, [Wednesday,November 18 2020]

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்றான ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் டீசர் இன்று காலை வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில் சற்று முன் ‘நெற்றிக்கண்’ டீஸர் வெளியாகி உள்ளது

இந்த டீசரில் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்திருக்கும் நிலையில் டீசரை பார்க்கும்போதே அதிரடி ஆக்ஷன் மற்றும் த்ரில் கதையம்சம் உள்ள படம் என்று தெரிகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் டீசரில், ‘ஒரு ஊரில் பாவப்பட்ட ஆட்டுக்குட்டிகள் நிறைய இருந்தது என்றும் அது தெரிஞ்சிக்கிட்ட ஒரு கெட்ட நரி அதோட வேலையை காட்டிக்கொண்டு இருந்துச்சு என்றும், அப்போ ஒரு தைரியமான ஆடு, நரிக்கு ஒரு குழியைத் தோண்டியது என்றும், அந்த நரியும் நல்லபடியா வந்து குழியும் விழுந்துச்சாம்’ என்றும் ஆடு, நரி கதையை நயன்தாரா கேரக்டர் கூறும் வகையில் இந்த டீசர் அமைக்கப்பட்டுள்ளது

அதிரடி ஆக்சன் மற்றும் த்ரில் காட்சிகளும், நயன்தாராவின் அபாரமான நடிப்பையும் பார்க்கும்போது இந்த படம் வேற லெவலுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக நயன்தாரா பார்வை தெரியாத மாற்றுத்திறனாளியாக நடித்துள்ள இந்த படம் அவரது திரையுலக வாழ்வில் மேலும் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் ராஜசேகர் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

நடிகர் தவசியிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியது என்ன?

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' உள்பட பல திரைப்படங்களில் கிராமத்து கேரக்டர்களில் நடித்து அசத்திய நடிகர் தவசி கடந்த சில நாட்களாக புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில்

விபத்தில் சிக்கிய குஷ்பு ! 

சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை குஷ்பூ அக்கட்சியில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நடிகர் தவசிக்கு சிம்பு அளித்த மிகப்பெரிய தொகை!

'கருப்பன் குசும்புக்காரன்' என்ற டயலாக் மூலம் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் தவசி 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற திரைப்படத்தில் பஞ்சாயத்து காட்சியில் நடிப்பில் தூள் கிளப்பியிருப்பார்.

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் அளித்த பரிசு என்ன தெரியுமா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு அதிகாலை 12 மணியிலிருந்து ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள்

இதுதான் லவ்லி ப்ரிவெட்டிங் போட்டோஷூட்: ஆபாச தம்பதிகளுக்கு சாட்டையடி!

கடந்த சில ஆண்டுகளாக திருமணத்திற்கு முந்தைய ப்ரிவெட்டிங் போட்டோஷூட் கலாச்சாரம் பெருகி வருகிறது. அதிலும் ஒரு சிலரின் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்