ஜீஸஸ் என் ஃப்ரெண்டு தான், எண்ணெயில போட்டு பொரிச்சிடுவேன்: மூக்குத்தி அம்மன் ஸ்னீக்பீக்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் நாளை தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளிவந்து படத்தின் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற நிலையில் சற்றுமுன் ஆர்ஜே பாலாஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஸ்னீக்பீக் வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மனோபாலா கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கும்போது நயன்தாரா அந்த இடத்திற்கு வந்து ’கயவர்கள் முடிவில்லா தண்டனையை அனுபவிப்பார்கள் என பைபிளில் உள்ள ஒரு வரியை கூறி, ‘ஜீசஸ் என் ஃப்ரெண்டு தான், அவருக்கு நீ பண்றது செம கடுப்பாகும். உன்னை ஹெல்லுக்கு அனுப்பி எண்ணெயில் போட்டு பொரிச்சிடுவேன்’ என்று மிரட்டும் காட்சி இந்த படத்தின் எதிர்பார்ப்பை மிகவும் அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில் ஆன்மீகம் என்ற பெயரில் அரசியல் செய்து, பொது மக்களை ஒருசிலர் எந்த அளவுக்கு மூளைச்சலவை செய்து வருகின்றனர் என்பதை தோலுரித்துக் காட்டும் படமாக இந்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.