close
Choose your channels

நயன்தாராவின் அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

Friday, February 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வந்த படங்களில் ஒன்று ’மூக்குத்தி அம்மன்’. நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நயன்தாரா பல கோயில்களுக்கு நேரடியாக சென்று சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் ’மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இந்த படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன. இதன் முதல் கட்டமாக நாளை இரவு 7 மணிக்கு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னரே பிரிலுக் போஸ்டர் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. இந்த போஸ்டர் அட்டகாசமான இருப்பதாகவும் நயன்தாராவுக்கு இந்த படம் மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதன்முதலாக அம்மன் கேரக்டரில் நடித்துள்ள நயன்தாராவை பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment