நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' இயக்குனர் இவர்தான்: இன்னொரு ரூ.100 கோடி வசூல் உறுதியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம், ஆர்.ஜே பாலாஜியின் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியாகி சிறப்பான வரவேற்பை வசூலையும் பெற்றது.
இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுந்தர் சி இந்த படத்தை இயக்குவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தர் சி சமீபத்தில் இயக்கிய ’அரண்மனை 4’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதால், ’மூக்குத்தி அம்மன் 2 ’படமும் அதே அளவுக்கு வசூல் செய்து மாபெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'மூக்குத்தி அம்மன் 2’ படத்தை சுந்தர் சி இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Welcoming The King 👑 of Commercial Entertainers, Director Sundar C🔥 to the Divine Fantasy World of MA-2 🔱#MookuthiAmman2@IshariKGanesh @VelsFilmIntl#Nayanthara #SundarC @Rowdy_Pictures @ivyofficial2023@RajaS_official @AvniCinemax_ @khushsundar @B4UMotionPics… pic.twitter.com/58xhNR67SC
— Vels Film International (@VelsFilmIntl) September 16, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments