நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2': முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கும் ’மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் முக்கிய தகவலை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் முக்கிய தகவலை நாளை மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
கடவுளின் ஆசீர்வாதத்தால் இந்த படத்தை தொடங்கும் முன்னர் ஒரு ஸ்பெஷல் செலிபரேஷன் இருக்கிறது என்று கூறியுள்ள வேல்ஸ் நிறுவனம், நாளை என்ன அறிவிப்பை வெளியிடுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா மீண்டும் அம்மன் ஆக நடிக்க இருக்கும் நிலையில் நாளை அனேகமாக இந்த படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தை இயக்கிய ஆர்ஜே பாலாஜி, த்ரிஷா நடிக்க இருக்கும் ’மாசாணி அம்மன்’ என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதால் ’மூக்குத்தி அம்மன் 2’ படத்தை ஒரு பிரபல இயக்குனர் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
A Divine Shoutout🔱
— Vels Film International (@VelsFilmIntl) September 15, 2024
Before the arrival of Goddess🔥, it's Time for a special moment to celebrate🫰🏻
An Important Announcement Tomorrow at 6️⃣ P.M. @IshariKGanesh @VelsFilmIntl @Rowdy_Pictures #MA2 pic.twitter.com/CABSXHAWZi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments