சபாஷ் சரியான போட்டி.. நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2', த்ரிஷாவின் 'மாசாணி அம்மன்'..!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் 2020 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மீண்டும் ஒரு அம்மன் படம் உருவாக இருப்பதாகவும் அதில் நயன்தாராவுக்கு பதில் த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு ’மூக்குத்தி அம்மன் 2’ என்ற டைட்டில் வைக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அதை மறுத்து ஆர்ஜே பாலாஜி ’மாசாணி அம்மன்’ என்ற டைட்டில் வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது.
இதனால் இந்த படம் ’மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகமா? அல்லது ’மாசாணி அம்மன்’ என்ற வேறு கதையம்சம் உள்ள படமா? என்ற குழப்பம் ரசிகர்களுக்கு இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென ’மூக்குத்தி அம்மன்’ படத்தை தயாரித்த வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ’மூக்குத்தி அம்மன் 2’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளதோடு நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது என்றும் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி ’மூக்குத்தி’ அம்மன் படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கிய நிலையில் ’மூக்கத்தி அம்மன் 2’ படத்தை அவர் இயக்கவில்லை என்பதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை வேறொரு பிரபல இயக்குனர் இயக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஒரு பக்கம் நயன்தாராவின் ’மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் , இன்னொரு பக்கம் த்ரிஷாவின் ’மாசாணி அம்மன்’ திரைப்படம் என ஒரே நேரத்தில் இரண்டு பிரபல நடிகைகளின் அம்மன் படங்கள் உருவாக இருப்பதை எடுத்து ரசிகர்கள் ’சபாஷ் சரியான போட்டி’ என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக நயன்தாரா மற்றும் த்ரிஷா ஆகிய இருவருமே தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளாக இருந்து வரும் நிலையில் இந்த அம்மன் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Let the good receive her blessings🔱 Let the evil be crushed at her feet⚡
— Vels Film International (@VelsFilmIntl) July 12, 2024
Lady Superstar #Nayanthara 🔥 is back to enthrall us in #MookuthiAmman2 @IshariKGanesh @VelsFilmIntl @Rowdy_Pictures pic.twitter.com/985zqVpnfv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments