நயன்தாராவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!

  • IndiaGlitz, [Saturday,April 13 2019]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்திலும், தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அவர் நடித்து முடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதியும், கொலையுதிர்க்காலம் விரைவிலும் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் நயன்தாரா நடித்து வந்த மலையாள திரைப்படமான 'லவ் ஆக்சன் டிராமா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விரைவில் தொடங்கி, இவ்வாண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடித்து வரும் 'சயிர நரசிம்ம ரெட்டி' திரைப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டதால் இந்த ஆண்டு நயன்தாரா நடித்த ஐந்து படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நயன்தாரா நடித்த 'விஸ்வாசம்' மற்றும் ஐரா படங்கள் இந்த ஆண்டில் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.