ஆஸ்காருக்கு செல்லும் நயன்தாரா திரைப்படம்: விருதை வெல்லுமா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திரைப்படம் ஆஸ்காருக்கு செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

94வது ஆஸ்கார் விருதுகள் அடுத்த ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விருதில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் இந்திய திரைப்படங்களை தேர்வு செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது 14 இந்திய திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்காக அனுப்ப நடுவர்கள் முடிவு செய்துள்ளனர். அந்த 14 திரைப்படங்களில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ’கூழாங்கல்’ என்ற திரைப்படமும் இடம்பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ள இந்த படம் குடிகார தந்தைக்கும் அப்பாவி மகனுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் தான் கதை. இந்த படம் ஏற்கனவே சமீபத்தில் ரோட்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் “டைகர் விருது” பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே யோகி பாபு நடித்த ’மண்டேலா’ ஆஸ்காருக்கு செல்ல உள்ள நிலையில் தற்போது ’கூழாங்கல்’ என்ற இன்னொரு தமிழ் திரைப்படமும் ஆஸ்காருக்கு செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆஸ்கார் விருதுக்கு ’சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’ போன்ற படங்களும் தேர்வு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதை பெறவில்லை என்ற நிலையில் இந்த ஆண்டு ‘மண்டேலா’ அல்லது ‘கூழாங்கல்’ விருதினை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் அபர்ணா தாஸ் கேரக்டர் இதுதானா?

தளபதி விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள அபர்ணாதாஸ் கேரக்டர் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது

புதிய தொழில் துவங்கிய ரஜினி மகள்… நெகிழ்ச்சியில் பாராட்டும் ரசிகர்கள்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, ஹுட் (Hoote) எனும் புதிய சமூகவலைத்தள நிறுவனத்தை துவங்க உள்ளதாகத்

வெங்காயத்தால் வந்த வினை… புதிய தொற்றுநோயால் அச்சம்!

அமெரிக்காவில் வெங்காயத்துடன் தொடர்புடைய சால்மோனெல்லா எனும் நோய் கடந்த 2 மாதங்களாக பரவிவருகிறது

16 வயதில் மாடல் அழகிகளை ஓரம்கட்டிய அனிகா சுரேந்தர்… வேறலெவல் புகைப்படம்!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்தர்

நட்சத்திர திருமணம்- குதிரையேற்ற வீரரை கைப்பிடித்த பில்கேட்ஸின் மகள்!

உலகத்தின் டாப் 10 பணக்காரர்களுள் ஒருவரான பில்கேட்ஸின் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸ்(28)