ஆஸ்காருக்கு செல்லும் நயன்தாரா திரைப்படம்: விருதை வெல்லுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திரைப்படம் ஆஸ்காருக்கு செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
94வது ஆஸ்கார் விருதுகள் அடுத்த ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விருதில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் இந்திய திரைப்படங்களை தேர்வு செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது 14 இந்திய திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்காக அனுப்ப நடுவர்கள் முடிவு செய்துள்ளனர். அந்த 14 திரைப்படங்களில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ’கூழாங்கல்’ என்ற திரைப்படமும் இடம்பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ள இந்த படம் குடிகார தந்தைக்கும் அப்பாவி மகனுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் தான் கதை. இந்த படம் ஏற்கனவே சமீபத்தில் ரோட்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் “டைகர் விருது” பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே யோகி பாபு நடித்த ’மண்டேலா’ ஆஸ்காருக்கு செல்ல உள்ள நிலையில் தற்போது ’கூழாங்கல்’ என்ற இன்னொரு தமிழ் திரைப்படமும் ஆஸ்காருக்கு செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆஸ்கார் விருதுக்கு ’சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’ போன்ற படங்களும் தேர்வு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதை பெறவில்லை என்ற நிலையில் இந்த ஆண்டு ‘மண்டேலா’ அல்லது ‘கூழாங்கல்’ விருதினை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
There’s a chance to hear this!
— Vignesh Shivan (@VigneshShivN) October 23, 2021
“And the Oscars goes to …. ???????????? “
Two steps away from a dream come true moment in our lives …. ❤️❤️??????????????#Pebbles #Nayanthara @PsVinothraj @thisisysr @AmudhavanKar @Rowdy_Pictures
Can’t be prouder , happier & content ?? pic.twitter.com/NKteru9CyI
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com