நயன்தாராவின் முதல் படத்திற்கே கிடைத்த சர்வதேச விருது: குவியும் வாழ்த்துக்கள்!
- IndiaGlitz, [Monday,February 08 2021]
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வரும் நிலையில் அவர் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ’ரெளடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை சமீபத்தில் தொடங்கினார்.
இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ’கூழாங்கல்’ என்ற திரைப்படம் தயாரானது என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படம் சர்வதேச டைகர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டது என்பதும், இந்த விருது நடக்கும் நிகழ்ச்சிக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி 2021 ஆம் ஆண்டுக்கான டைகர் விருதை ’கூழாங்கல்’ திரைப்படம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் முதல் தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நயன்தாரா தயாரிப்பில் உருவான முதல் திரைப்படத்திற்கே சர்வதேச விருது கிடைத்துள்ளது என்பதும் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமைகளில் ஒன்றாக ஆகும்.
இந்த தகவலை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்தப் படம் டைகர் விருதினை பெற்றுள்ளதை அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
First Production of @Rowdy_Pictures wins one of the most prestigious international award !
— Vignesh Shivan (@VigneshShivN) February 7, 2021
First Tamil film to win this award ??????
2021 #TigerAward winner #Koozhangal #Pebbles
Can’t be happier ! :) @PsVinothraj @thisisysr @Rowdy_Pictures #Nayanthara https://t.co/P8K0R8jF5g