சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் நயன்தாரா படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து சமீபத்தில் ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார்கள் என்பதும் இந்த நிறுவனம் பல நல்ல திரைப்படங்களின் உரிமைகளை வாங்கி வெளியிட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் இந்த நிறுவனம் வாங்கிய முதல் திரைப்படம் ’கூழாங்கல்’. அறிமுக இயக்குனர் வினோத் இயக்கிய இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் ஏற்கனவே ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது என்பதும் இந்த விருதை வென்றுள்ள முதல் தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் மே 29-ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை திரையிடப்பட்டுள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து தங்களது நிறுவனத்தின் முதல் படமே சர்வதேச அளவில் விருதுகளை பெற்று வருவதும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதும் தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
இந்த படம் ஒரு குடிகார தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவுகளை சிறப்பாக சொல்லும் கதை என்பதும் தந்தையுடன் பிரிந்துபோன தாயை மீண்டும் இணைத்து வைக்கும் மகனின் முயற்சி பலித்ததா என்பதே இந்த படத்தின் கதை என்பதும் குறிப்பிடத்தக்கது
Super delighted ??????❤️❤️❤️
— Vignesh Shivan (@VigneshShivN) May 30, 2021
Proud & happy ???? https://t.co/8VeuDvOirs
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments