ஐந்து நாட்களில் நயன்தாராவின் இரண்டு ரிலீஸ்: ரசிகர்கள் மகிழ்ச்சி

  • IndiaGlitz, [Saturday,March 23 2019]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல்முறையாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்த 'ஐரா' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர், டிரைலர் மிகப்பெரிய ஹிட்டாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு நல்ல புரமோஷனும் செய்யப்பட்டுள்ளதால் ஓப்பனிங் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாரா நடித்து விரைவில் வெளியாகவுள்ள 'கொலையுதிர்க்காலம்' என்ற திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 'கொலையுதிர்க்காலம்' டிரைலர், மார்ச் 28ஆம் தேதி 'ஐரா' படம் ரிலீஸ் என ஐந்து நாட்களில் நயன்தாராவின் இரண்டு ரிலீஸ் அவரது ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.

மேலும் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனையடுத்து 'சயிர நரசிம்ம ரெட்டி', 'தளபதி 63' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளதால் இந்த ஆண்டு நயன்தாராவுக்கு திரையுலகில் ஒரு பொற்காலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

அரசியல்ல நாம தலையிடனும், இல்லாட்டி அரசியல் நம்ம வாழ்க்கைல தலையிடும்: 'உறியடி 2' டீசர் விமர்சனம்

'உறியடி' படத்தில் நடித்து இயக்கிய விஜயகுமார், அதன் தொடர்ச்சியாக தற்போது 'உறியடி 2' படத்தை இயக்கி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் வெளிநாடு செல்கிறாரா விஷால்?

சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே 'மதகஜ ராஜா', மற்றும் 'ஆம்பள' படங்களில் நடித்த விஷால், மீண்டும் அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 

முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த விஜய்சேதுபதி படக்குழு!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் தொடங்குவது முடிவதும் மின்னல் வேகத்தில் நடக்கும் என்பது தெரிந்ததே! வருடக்கணக்கில் மெகா படங்களை எடுத்து கொண்டிருக்கும் படக்குழுவினர்

விராத் கோஹ்லி - சுரேஷ் ரெய்னா: முதல் ஐந்தாயிரம் யாருக்கு?

ஐபிஎல் திருவிழா இன்று முதல் சென்னையில் தொடங்கவுள்ள நிலையில் இன்றைய முதல் போட்டி தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் விராத் கோஹ்லியின் பெங்களூரு அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு! சிவகங்கை மட்டும் சஸ்பென்ஸ் ஏன்?

அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்திற்கும் கிளம்பிவிட்ட நிலையில்