நயன்தாராவின் 'ஜிந்தாகோ' ரிலீஸ் தேதி அறிவிப்பு 

  • IndiaGlitz, [Wednesday,March 13 2019]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்துள்ள அடுத்த படமான 'ஐரா' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் புரமோஷன் பணிகளில் அடுத்தகட்டமாக வரும் வெள்ளியன்று அதாவது மார்ச் 15ஆம் தேதி இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களில் ஒன்றான 'ஜிந்தாகோ' என்ற வீடியோ புரமோ பாடல் வெளியாகவுள்ளது. கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் உருவாகிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த பாடலின் லிரிக் வீடியோ கடந்த 1ஆம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில் கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் இரண்டாவது வெற்றிப்படமாக நயன்தாராவுக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

யாரையும் நம்பாதீங்க: இளம்பெண்களுக்கு நடிகை அதுல்யா அட்வைஸ்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகினர் அனைவருமே தங்களது கருத்துக்களை ஆவேசமாக பதிவு செய்துள்ள நிலையில் நடிகை அதுல்யா இதுகுறித்து கூறியதாவது

'சார்' என்று கூப்பிட வேண்டாம்! சென்னை கல்லூரி மாணவிகளுக்கு ராகுல்காந்தி வேண்டுகோள்

தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று காலை தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளுடன் உரையாடினார்

பூஜையுடன் தொடங்கிய கார்த்தியின் அடுத்த படம்

'தேவ்' படத்தை அடுத்து கார்த்தி தற்போது 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஹீரோயின், டூயட் பாடல்கள் இன்றி உருவாகி வரும்

பொள்ளாச்சி காமவெறியர்களுக்கு தர்ம அடி கொடுத்த இளைஞர்கள்: அதிர்ச்சி வீடியோ

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான அப்பாவி இளம்பெண்களின் மனதை சமூக வலைத்தளங்கள் மூலம் கெடுத்து அவர்களின் வாழ்வினை சீரழித்த திருநாவுக்கரசு உள்பட நான்கு கயவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது

ஜீவாவின் 'கீ' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் ஒரே ஒரு சூப்பர் ஹிட் வெற்றிக்காக காத்திருக்கும் நடிகர் ஜீவா, தான் நடித்து முடித்த 'கீ' படத்தினை மலைபோல் நம்பியுள்ளார்.