உலகப்புகழ் பெற்ற கோல்டன் கோவிலில் நயன்தாரா

  • IndiaGlitz, [Monday,January 29 2018]

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வேலைக்காரன்', 'அறம்' ஜெய்சிம்ஹா ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது அவர் இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர்க்காலம்', 'கோலமாவு கோகிலா', மற்றும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். நயன்தாரா நடித்து வரும் படங்கள் அனைத்தும் நாயகிக்கு முக்கியத்தும் உள்ள வேடங்கள் என்பதால் இந்த படங்களும் அவருக்கு வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் உலகப்புகழ் பெற்ற அமிர்தசரஸ் பொற்கோவிலில் நயன்தாரா சென்று வழிபட்டுள்ளார். கருப்பு நிற உடையில் தலையில் முக்காடு போட்டு அவர் பொற்கோவில் முன் நிற்கும் புகைப்படங்கள்  இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் பொற்கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.