பிரபல நடிகரின் 522வது படத்தில் நயன்தாரா!

  • IndiaGlitz, [Thursday,November 25 2021]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது அவர் நடிக்க உள்ள ’கனெக்ட்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது என்பதும் இந்த படத்தை ’மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் என்பவர் இயக்க இருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் அனுபம்கெர் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அனுபம்கெர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது 522வது படம் தான் நயன்தாராவின் ’கனெக்ட்’ திரைப்படம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வாய்ப்பை தனக்கு தந்ததற்கு விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் அஸ்வின் சரவணன் ஆகியோருக்கு நன்றி என்றும் இந்த படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்ததாகவும், திறமையான டீமுடன் இணைந்து கொள்வதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.