நயன்தாராவின் 'அறம்' டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Wednesday,November 01 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் 'அறம்'. இந்த படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'அறம்' படத்தின் டிரைலர் இன்று மாலை 5.30 மணிக்கு இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகிறது. நயன்தாரா மாவட்ட ஆட்சி தலைவராக நடித்துள்ள இந்த படத்தின் புரமோஷன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில வருடங்களாகவே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் மட்டுமே நடித்து வரும் நயன்தாராவின் இந்த படம் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மீஞ்சூர் கோபி இயக்கியுள்ள இந்த படத்தில் விக்னேஷ், ரமேஷ், சுனுலட்சமி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டாகியுள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

More News

முதலாளி ஆகும் சூரிக்கு வாழ்த்து தெரிவிக்கும் சிவகார்த்திகேயன்

ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு பொருத்தமான காமெடி நடிகர்கள் கோலிவுட் திரையுலகில் தானாகவே அமைந்துவிடும். அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு அமைந்த சிறப்பான காமெடி நடிகர் சூரி.

'தளபதி 62' ஹீரோயின் யார்?

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் மூன்றாவது வாரத்திலும் மெர்சலான வசூலை தந்து கொண்டிருக்கின்றது. விஜய்யின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக 'மெர்சல்' அமைந்துள்ள நிலையில் 'தளபதி 62' திரைப்படத்தின்

வேலைக்காரனின் 2இன்1 சர்ப்ரைஸ் இதுதான்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' படத்தின் 2இன்1 சர்ப்ரைஸ் இன்று மாலை வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

'அமலாபால்' கார் வாங்கியதில் விதிமீறல் இல்லை: புதுவை அமைச்சர் பேட்டி

நடிகை அமலாபால் புதுச்சேரி முகவரியில் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதுகுறித்து வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நஸ்ரியாவின் ரீஎண்ட்ரி உண்மையா? அவரே அளித்த விளக்கம்

நடிகை நஸ்ரியா கோலிவுட்டில் பிரபலமாக இருக்கும்போதே மலையாள நடிகை பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகி, இல்லற வாழ்க்கையில் மூழ்கினார்.