மிக்ஜாம் புயலால் 'அன்னபூரணி'க்கு ஏற்பட்ட பாதிப்பு.. ஓடிடி ரிலீசில் தப்பிக்குமா? தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,December 24 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீசான நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆன ஒரு சில நாட்களில் சென்னையில் மிக்ஜாம் புயல் அடித்ததால் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் இந்த படத்தின் வசூல் மிகவும் பாதிக்கப்பட்டது.

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக சில காட்சிகள் திரையரங்குகளில் ரத்து செய்யப்பட்டது என்பதும் மற்ற காட்சிகளில் கூட பெரிய அளவில் மழை காரணமாக ரசிகர்கள் திரையரங்குக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘அன்னபூரணி’ திரைப்படத்திற்கு ஓரளவு பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்தாலும் மிக்ஜாம் புயல் காரணமாக வசூல் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அன்னபூரணி’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என்று அஅறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஓடிடியில் ‘அன்னபூரணி’ ரிலீசாக இருக்கும் நிலையில் திரையரங்குகளில் புயல் காரணமாக பார்க்க முடியாதவர்கள் ஓடிடியில் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.