நயன்தாராவின் 'அன்னபூரணி' படத்தில் சர்ச்சை காட்சி: நெட்பிளிக்ஸ் எடுத்த அதிர்ச்சி முடிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அன்னபூரணி’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தில் ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்ற வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்துமத மக்களின் மனதை இந்த காட்சி, புண்படுத்தும் காட்சியாக இருந்தது என்றும் இந்த காட்சியை நீக்க வேண்டும் என்றும் இந்துமத ஆதரவாளர்கள் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் திடீரென நெட்பிளிக்ஸ் தற்போது ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது. இதன்படி மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருந்த புகாரை அடுத்து நயன்தாரா நடித்த 'அன்னபூரணி’ திரைப்படத்தை நெட்ப்ளிக்ஸ் தனது ஓடிடியில் தளத்தில் இருந்து நீக்கி உள்ளது. இதனால் 'அன்னபூரணி’ திரைப்படத்தை இனி ஓடிடியில் ரசிகர்கள் பார்க்க முடியாது,
முன்னதாக மத உணர்வுகளை புண்படுத்துவதாக 'அன்னபூரணி’ படத்துக்கு எதிராக மும்பை காவல் நிலையத்தில் சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி அளித்த புகாரின் அடிப்படையில் நயன்தாரா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments