close
Choose your channels

நாளை ரிலீஸ் ஆகும் நயன்தாராவின் 'அன்னபூரணி': சென்சார், ரன்னிங் டைம் தகவல்கள்..!

Thursday, November 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படத்தில் ஜெய், சத்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, குமாரி சச்சு, ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த பெண் அசைவ உணவு சமைக்கும் போட்டியில் கலந்து கொண்டு சவால்களை கடந்து எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நயன்தாரா இந்த படத்தில் செஃப் கேரக்டரில் அட்டகாசமாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 146 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 26 நிமிடங்கள் ரன்னிங் டைம் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’ராஜா ராணி’ படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாரா மற்றும் ஜெய் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் பாசிட்டிவ்வாக இருப்பதால் இந்த படம் ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமன் இசையில் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிரவீன் தோனி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment