நாளை ரிலீஸ் ஆகும் நயன்தாராவின் 'அன்னபூரணி': சென்சார், ரன்னிங் டைம் தகவல்கள்..!

  • IndiaGlitz, [Thursday,November 30 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படத்தில் ஜெய், சத்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, குமாரி சச்சு, ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த பெண் அசைவ உணவு சமைக்கும் போட்டியில் கலந்து கொண்டு சவால்களை கடந்து எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நயன்தாரா இந்த படத்தில் செஃப் கேரக்டரில் அட்டகாசமாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 146 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 26 நிமிடங்கள் ரன்னிங் டைம் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’ராஜா ராணி’ படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாரா மற்றும் ஜெய் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் பாசிட்டிவ்வாக இருப்பதால் இந்த படம் ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமன் இசையில் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிரவீன் தோனி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

என்னைய வச்சு புரொஜக்ட் பண்ணினா செஞ்சு விட்ருவேன்.. அழுகும் அர்ச்சனாவுக்கு விஷ்ணு வார்னிங்..

நேற்று விஷ்ணுவிடம் நான் அழுக மாட்டேன் என்று சவால் விட்ட அர்ச்சனா இன்று திடீரென அழுது கொண்டிருக்கும் காட்சியும், என்னை வைத்து புரொஜக்ட் செய்தால் செஞ்சு விட்ருவேன் என்று அர்ச்சனாவுக்கு விஷ்ணு

விஜய் டிவியில் புதிய மெகா தொடர் 'சக்திவேல்'.. சுவாரஸ்யமான குடும்பக்கதை..!

விஜய் டிவி சக்திவேல் என்ற புத்தம் புதிய மெகாத்தொடர் வரும் திங்கள் முதல் தொடங்கவுள்ளது.  சக்திவேல் - தீயாய் ஒரு தீராக்காதல்  கதை ஒரு சுவாரஸ்யமான காதல் நிறைந்த விறுவிறுப்பான குடும்ப கதை.

வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது: சமுத்திரக்கனியின் பதிலடியால் தொடரும் பிரச்சனை..!

'பருத்திவீரன்' பட இயக்குனர் அமீர் மீது சர்ச்சைக்குரிய வகையில் ஞானவேல் ராஜா பேசிய நிலையில் அது குறித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என திரையுலகினர் வலியுறுத்தினார்.

இந்துஜாவின் இந்த பதிவு பூர்ணிமாவுக்கா? என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்..!

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு 'பார்க்கிங்' படத்தின் புரமோஷனுக்காக சென்று வந்த நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் 'சரியானதை செய்யும் நேரம் எல்லாமே சரியானது தான்'

ஷ்ஷ்...யப்பா முடியலடா.. விஷ்ணு வீடியோவுக்கு ஹரிஷ் கல்யாணின் பதிவு..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஷ்ணு, மணியுடன் பேசுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த வீடியோவுக்கு ஷ்ஷ்...யப்பா முடியலடா.. என்று ஹரிஷ் கல்யாண் பதிவு செய்திருப்பது