நயன்தாராவின் 75வது படத்தில் யார் யார் இருக்காங்க தெரியுமா? சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?

  • IndiaGlitz, [Tuesday,July 12 2022]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் விபரங்களை தற்போது பார்ப்போம்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடித்த ’அய்யா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்களில் நடித்தார். மேலும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாரா திரைக்கு வந்து 19 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது அவருடைய 75வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நயன்தாராவின் 75வது திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ்நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தை இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கயுள்ளார். இந்த படத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ திரைப்படத்திலும் ஜெய், சத்யராஜ் நடித்துள்ளதால் ‘ராஜா ராணி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ என்ற எண்ணமும் ரசிகர்கள் மனதில் ஏற்பட்டுள்ளது .

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.