சமந்தாவை கட்டிப்பிடித்து உணர்ச்சி வசப்பட்ட நயன்தாரா: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் சேதுபதியுடன் நயன்தாரா மற்றும் சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து தற்போது புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் வெளியான ’டுடுடு’ என்ற பாடல் மிகப் பெரிய அளவில் வைரலானது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த பாடலில் விஜய் சேதுபதி கலர்ஃபுல்லாக இருக்கும் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் சேர்ந்து ஆடும் ஜாலியான ஆட்டம் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது .
இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங்கின்போது ஒரு காட்சியை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நயன்தாரா, சமந்தாவின் கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்த வீடியோவை சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கலா மாஸ்டர், ரெடின் கிங்ஸ்லி, லொள்ளுசபா மாறன், ஸ்ரீசாந்த் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
This Video Is Just ??❤️❤️ @Samanthaprabhu2 & #Nayanthara! ?? #KaathuVaakulaRenduKaadhal #KRK #Samantha #SamanthaRuthPrabhu pic.twitter.com/EM0rYYF8NO
— Troll Who Trolls Samantha™ (@TeamTWTS) April 17, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments