பிரபல இயக்குனருக்கு சாட்டையடி பதில் கொடுத்த நயன்தாரா
- IndiaGlitz, [Monday,December 26 2016]
பிரபல இயக்குனர் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' சமீபத்தில் வெளிவந்து கலவையான விமர்சனங்கள் பெற்று திரையரங்குகளில் ஓடி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சுராஜ் நடிகைகளின் கிளாமர் குறித்து பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஒரு ஆடியன்ஸ் ஹீரோவிடம் ஆக்சன் காட்சியையும் ஹீரோயினியிடம் கிளாமரையும் எதிர்பார்த்து வருகிறார். பணம் கொடுத்து வரும் ஆடியன்ஸ்களை திருப்தி செய்யும் வகையில் நான் நடிகைகளை கிளாமராக என்னுடைய படத்தில் காண்பிக்கின்றேன். நடிகைகள் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு நடிப்பதால் கிளாமராக நடிக்கவும் தயங்குவதில்லை. இன்று முன்ன்ணி நடிகைகளாக இருப்பவர்கள் அனைவரும் கிளாமராக நடிக்கின்றவர்கள்தான். எனவே நான் என்னுடைய காஸ்ட்யூம் டிசைனரிடம் கண்டிப்பாக நடிகைகளுக்கு கிளாமர் உடையைத்தான் தயார் செய்ய சொல்வேன்' என்று கூறியுள்ளார்.
இந்த பேட்டிக்கு நயன்தாரா கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இயக்குனர் சுராஜ் பொறுப்பில்லாமல் ஹீரோயின் குறித்து தவறாக பேசியுள்ளார் என்றும் எந்த ஆடியன்ஸும் திரையரங்கிற்கு நடிகையிடம் கிளாமரை எதிர்பார்த்து வருவதில்லை என்றும், நமது ஆடியன்ஸ்கள் சுராஜைவிட மெச்சூராகவும், பெண்களை மதிப்பவர்களாகவும் உள்ளனர் என்றும் காட்டமாக கூறியுள்ளார்.
பிங்க், டங்கல் போன்ற பெண்களை மதிக்கும் படங்கள் வரும் இந்த காலத்தில் சுராஜ் இதுபோன்ற எந்த படத்தை இயக்கியுள்ளார் என்றும் நயன்தாரா கேள்வி எழுப்பியுள்ளார். நடிகைகளை பணத்திற்காக ஆடை அவிழ்ப்பவர்கள் என்று கேவலமாக சித்தரிப்பதை நிறுத்த வேண்டும், நானும் பல படங்களில் கிளாமராக நடித்துள்ளேன், ஆனால் அதில் நான் விருப்பப்பட்டால் மட்டுமே நடிப்பேன். எந்த இயக்குனரும் என்னிடம் ஆடியன்ஸ் விருப்பத்திற்காக கிளாமராக நடியுங்கள் என்று கூறியதில்லை என்றும் அவர் சாட்டையடி பதிலாக இயக்குனர் சுராஜூக்கு கூறியுள்ளார்.
நயன்தாராவின் தைரியமான இந்த கருத்துக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.