'தி டெஸ்ட்' படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட்ட நயன்தாரா.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,January 31 2024]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் ’தி டெஸ்ட்’படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தி டெஸ்ட்’. சசிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு காதல் சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு முடிவடைந்தது படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டு இருக்கும் நிலையில் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நயன்தாரா’ தி டெஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை நீங்கள் திரையரங்குகளை பார்க்கலாம் என்றும் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த படம் தவிர நடிகை நயன்தாரா ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.