close
Choose your channels

விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா போட்ட மார்க் எவ்வளவு தெரியுமா?

Monday, August 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித் போன்றே தனது படங்களின் புரமோஷன்களை தவிர்த்து வரும் நயன்தாரா, இந்த படத்தின் தொலைக்காட்சி புரமோஷன் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது நயன்தாரா குறித்த எழுந்து வரும் காதல் கிசுகிசு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, 'இந்த உலகம் உங்களை பார்க்கிற விதம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும். சிலருக்கு இன்று உங்களை பிடிக்கும். நாளையே அவர்களுக்கு பிடிக்காமலும் போகலாம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சிந்தித்துக்கொண்டு இருந்தால் நாம் ஒரு வாழ்க்கையை வாழ முடியாது” என்று கூறினார்

அதேபோல் சிவகார்த்திகேயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் 10க்கு எவ்வளவு மார்க் என்ற கேள்விக்கு பதிலளித்த நயன்தாரா, சிவகார்த்திகேயனுக்கு 10க்கு 9 என்றும், விக்னேஷ் சிவனுக்கு 10க்கு 9.9 என்றும் மார்க் அளித்தார். இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் காதல் தோல்விக்காக ஒரு பாடலை அனிருத் கம்போஸ் செய்ய அதற்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment