close
Choose your channels

பூக்களே கொஞ்சம் ஓய்வெடுங்கள்.. அவள் வந்துவிட்டாள்.. நயன்தாராவின் பூமகள் ஊர்வலம்..!

Monday, June 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நயன்தாரா தற்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ள நிலையில் சமீபத்தில் அவர் ஹாங்காங் சென்றார் என்பதையும் அதன் பின்னர் அங்கிருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ஜப்பானில் உள்ள மலர் கண்காட்சியில் அவர் பூக்கள் நடுவே நடந்து செல்லும் வீடியோ அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் பின்னணியில் ’ஐ’ படத்தில் வரும் ’பூக்களே கொஞ்சம் ஓய்வெடுங்கள், அவள் வந்துவிட்டாள்' என்ற பாடல் ஒலிக்கும் நிலையில் ’பூ மகள் ஊர்வலத்தில் நயன்தாரா வருகிறார்’ என்பது போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

39 வினாடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ’மலர்கள் நடுவே ஒரு மனித மலர்’ ’ஒரு ரோஜா ராணி மலர்கள் தோட்டத்தில் இருக்கிறார்’ ’இந்த பாடல் உங்களுக்காக எழுதப்பட்டது போல் இருக்கிறது’ என்பது போன்ற கமெண்ட்டுகள் பதிவாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது மாதவனுடன் ’டெஸ்ட் ’ யோகி பாபு உடன் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ மற்றும் நிவின் பாலியுடன் ’டியர் ஸ்டூடண்ட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.