பூக்களே கொஞ்சம் ஓய்வெடுங்கள்.. அவள் வந்துவிட்டாள்.. நயன்தாராவின் பூமகள் ஊர்வலம்..!

  • IndiaGlitz, [Monday,June 03 2024]

நடிகை நயன்தாரா தற்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ள நிலையில் சமீபத்தில் அவர் ஹாங்காங் சென்றார் என்பதையும் அதன் பின்னர் அங்கிருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ஜப்பானில் உள்ள மலர் கண்காட்சியில் அவர் பூக்கள் நடுவே நடந்து செல்லும் வீடியோ அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் பின்னணியில் ’ஐ’ படத்தில் வரும் ’பூக்களே கொஞ்சம் ஓய்வெடுங்கள், அவள் வந்துவிட்டாள்' என்ற பாடல் ஒலிக்கும் நிலையில் ’பூ மகள் ஊர்வலத்தில் நயன்தாரா வருகிறார்’ என்பது போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

39 வினாடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ’மலர்கள் நடுவே ஒரு மனித மலர்’ ’ஒரு ரோஜா ராணி மலர்கள் தோட்டத்தில் இருக்கிறார்’ ’இந்த பாடல் உங்களுக்காக எழுதப்பட்டது போல் இருக்கிறது’ என்பது போன்ற கமெண்ட்டுகள் பதிவாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது மாதவனுடன் ’டெஸ்ட் ’ யோகி பாபு உடன் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ மற்றும் நிவின் பாலியுடன் ’டியர் ஸ்டூடண்ட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

More News

சிவகார்த்திகேயன் வீட்டிற்கு வந்த புது இளவரசன்.. மகிழ்ச்சியில் குடும்பம்..!

நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னாள் வெளியான குடும்ப புகைப்படத்தில் தெரிந்த நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை

விதவிதமா போட்டோஷூட் எடுப்பாங்களே.. என்ன ஆச்சு இந்த நடிகையின் முகத்திற்கு? ரசிகர்கள் அதிர்ச்சி..!

பாலிவுட் திரை உலகின் கிளாமர் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக வித்தியாசமான கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் திடீரென

முருக பக்தி: திரைப்பட இயக்குனர் வி.சேகர் அவர்களின் ஆன்மீக பயணம்!

புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் வி.சேகர், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "தமிழர் தெய்வம் முருகன்" என்ற தலைப்பில் தனது வாழ்க்கையில்

கமல் - ஷங்கரின் 'இந்தியன் 2' படத்திற்கு போட்டியா?  சன்னி லியோன் ட்வீட்டால் பரபரப்பு..!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே நாளில் சன்னி லியோன் நடித்த அதிரடி ஆக்சன்

பிக்பாஸ் அபிஷேக் இரண்டாம் திருமணம்.. மணமகள் யார் தெரியுமா? வைரல் புகைப்படங்கள்..!

பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் யூடியூபர் அபிஷேக் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.