நயன்தாராவின் தந்தை திடீரென மருத்துவமனையில் அனுமதி...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாகவும், முன்னணி நடிகையாகவும் கொடி கட்டிப்பறப்பவர் தான் நயன்தாரா. இவருடைய தகப்பனார் விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், தற்போது மனைவி ஓமனா குரியனுடன் கேரள மாநிலம், கொச்சியில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தார் குரியன். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலத்தில் பிரச்சனை ஏற்பட, கேரளாவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குரியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout