நயன்தாரா ரசிகர்களுக்கு இன்று டபுள் விருந்து

  • IndiaGlitz, [Monday,March 05 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருகிறார். புதிய வரவு நடிகைகளும் ஏற்கனவே உள்ள நடிகைகளும் அவரது இடத்தை அசைக்க முடியாத நிலையே தற்போது வரை உள்ளது. இளம்  நடிகைகளுக்கு இணையாக இன்றும் அவர் பிசியாக ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ரஜினி, கமல், அஜித் நடிக்கும் அடுத்த படங்களில் நடிக்கவும் அவரது பெயர் பரிசீலனையில் உள்ளது.

இந்த நிலையில் இன்று நயன்தாரா ரசிகர்களுக்கு டபுள் விருந்து கிடைக்கும் நாளாக அமைந்துள்ளது. நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் இடம்பெற்ற பாடலான 'விளம்பர இடைவேளை' என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கன்வே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த விருந்து கிடைத்த இரண்டு மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணிக்கு நயன்தாரா நடித்து வரும் இன்னொரு திரைப்படமான 'கோலமாவு கோகிலா' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளது. ஒரே நாளில் நயன்தாராவின் இரண்டு படங்களின் புரமோஷன்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இரு படங்களின் ரிலீஸ் குறித்த விபரங்களும் மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.