'மேதகு' இயக்குனருக்கு இது தேவையா? நயன்தாரா ரசிகர்கள் காட்டம்!

  • IndiaGlitz, [Wednesday,June 30 2021]

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தலைவர் பிரபாகரன் குறித்த திரைப்படமான ’மேதகு’ என்ற திரைப்படத்தை இயக்குனர் கிட்டு, தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் ஆரம்பகட்ட வாழ்க்கையை மிக அழகாக ’மேதகு’ என்ற திரைப்படமாக இயக்குனர் கிட்டு இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானதை அடுத்து இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் தமிழ் திரையுலகம் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் கிட்டு தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியுள்ளார். இது நயன்தாராவுக்கு ரசிகர்களை ஆத்திரமூட்டியது. ’மேதகு’ இயக்குனருக்கு இதெல்லாம் தேவையா? என்று நயன்தாரா ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். இயக்குனர் கிட்டு தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாராவின் காதல் குறித்து குறிப்பிடுகையில், எது இன்று உன்னுடையதோ.. அது நாளை மற்றொருவருடையதாகிறது.. மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்’ என்று பதிவு செய்துள்ளார். நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நிலையில் அவரது முந்தைய காதலை குறிக்கும் விதமாகத்தான் அவர் இவ்வாறு கூறியுள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டு இயக்குனர் கிட்டுவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு காதல் தோல்வியில் முடிந்துவிட்டால் இன்னொரு காதல் வராதா? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.

More News

தலைவர் யாருக்கும் விளக்கம் அளிக்கவில்லை: கஸ்தூரிக்கு ரஜினிகாந்த் பி.ஆர்.ஓ. பதில்!

தலைவர் யாருக்கும் விளக்கம் அளிக்கவில்லை என்றும், அவருடைய குடும்பத்தாரும் விளக்கம் அளிக்கவில்லை என்றும் கஸ்தூரியின் ட்வீட்டுக்கு ரஜினியின் பி.ஆர்.ஓ பதிலளித்து இருப்பது

அரசுப்பள்ளி முதல் என்கவுண்டர் வரை....! சைலேந்திர பாபுவின் திகைக்கவைக்கும் பின்னணி.....!

தமிழ்நாட்டின் 30-ஆவது டிஜிபி-(காவல்துறைத் தலைமை இயக்குனர்) ஆக இன்று பதவியேற்றுள்ளார் முனைவர் சைலேந்திரபாபு.

மணிகண்டன், நடிகை சாந்தினி சம்பவம்....! வாக்குமூலம் அளித்த மருத்துவர்....!

மாஜி அமைச்சர் மணிகண்டன், நடிகை சாந்தினியை பிரபல தனியார்ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது குறித்த ஆதாரங்கள், தற்போது காவல்துறையினர் கையில் சிக்கியுள்ளது.

அதிபருக்கு 15 மாதம் சிறை தண்டனை? அதிர்ச்சி சம்பவம்!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவிற்கு அந்நாட்டு

தடுப்பூசி தட்டுப்பாட்டை அடுத்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழகத்திற்கு தற்போது மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 21/2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும்