பெண் சாதனையாளர் விருது கொடுத்த அமைப்பிடம் நயன்தாரா மன்னிப்பு கேட்டது ஏன்?

  • IndiaGlitz, [Thursday,March 16 2017]

சென்னையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வரும் ரெயின் டிராப்ஸ் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சாதனை செய்த பெண்களுக்கு 'பெண் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. இந்த ஆண்டின் இந்த விருதுக்கு கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.

ஆனால் வெளியூர் படப்பிடிப்பு காரணமாக இந்த விருதை அவரால் விழாவிற்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் இந்த அமைப்பின் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்து தெரிவித்தார். தனது வாழ்த்து செய்தியில் நயன்தாரா கூறியதாவது: இந்த விருது பெற்றுக்கொண்டது எனக்கு உற்சாகமாக இருக்கிறது. உண்மையாக இந்த விருது நான் விருது வழங்கும் விழாவில் வந்து நேரடியாக பெற்றுக்கொள்ள விரும்பினேன். ஆனால் சென்னைக்கு வெளியில் படப்பிடிப்பு நடந்து வருவதால் என்னால் வரமுடியவில்லை.

நான் பெரும்பாலும் விழாக்களில் கலந்து கொள்வதில்லை. ஆனால், சமூக காரணங்களுக்காக இந்த விழாவில் நான் கலந்து கொள்ள விரும்பினேன். நான் வரமுடியாததற்கு இதயப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்நிறுவனம் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்' என்று நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் நடந்த இந்த விழாவில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் இந்த அமைப்பின் நல்லெண்ண தூதர் ஏ.ஆர்.ரெஹனா, ரெயின்ட்ராப்ஸ் நிறுவனத்தின் தலைவர் அரவிந்த் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

More News

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன் பிரபல இயக்குனர் வைத்த கோரிக்கை

'தென்மேற்கு பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'தர்மதுரை' உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சீனுராமசாமி சமீபத்தில் தமிழக முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமியிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அவர் வைத்துள்ள கோரிக்கையின் விபரம் பின்வருமாறு:

பாடகி சுசித்ரா எங்கே?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதில் கோலிவுட் பிரபலங்களின் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகின. ஹேக்கர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பக்கத்தில் வெளியான வீடியோவினால் கோலிவுட் திரையுலகில் இதுவரை ஏற்படாத பரபரப்பு ஏற்பட்டது...

ரஜினியால் தூக்கத்தை தொலைத்த 'மாநகரம்' இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகிற்கு புதியதாக வரும் திறமைசாலிகளை பாராட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் எந்தவித தயக்கமும் இல்லாதவர்.

கமல்ஹாசன் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! 3 பேர் கைது

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் திரையுலகிற்காகவே பிறந்தவர். இரண்டு மூன்று படங்கள் நடித்த நடிகர்கள் கூட ஓட்டல், ரியல் எஸ்டேட் என சம்பாதித்த பணத்தை வேறு துறைகளில் முதலீடு செய்து வரும் நிலையில் 50 ஆண்டுகளாக சினிமாவில் தன்னுடைய உழைப்பில் கிடைத்த பணம் முழுவதையும் சினிமாவுக்காக மட்டுமே செலவு செய்யும் ஒரே நடிகர்.

தொலைஞ்சு போங்கடா!! ஸ்ரீப்ரியா குறிப்பிட்டது யாரை?

பழம்பெரும் நடிகை ஸ்ரீப்ரியா தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்து வருபவர் என்பது அனைவரும் அறிந்ததே.