பெண் சாதனையாளர் விருது கொடுத்த அமைப்பிடம் நயன்தாரா மன்னிப்பு கேட்டது ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வரும் ரெயின் டிராப்ஸ் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சாதனை செய்த பெண்களுக்கு 'பெண் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. இந்த ஆண்டின் இந்த விருதுக்கு கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.
ஆனால் வெளியூர் படப்பிடிப்பு காரணமாக இந்த விருதை அவரால் விழாவிற்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் இந்த அமைப்பின் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்து தெரிவித்தார். தனது வாழ்த்து செய்தியில் நயன்தாரா கூறியதாவது: இந்த விருது பெற்றுக்கொண்டது எனக்கு உற்சாகமாக இருக்கிறது. உண்மையாக இந்த விருது நான் விருது வழங்கும் விழாவில் வந்து நேரடியாக பெற்றுக்கொள்ள விரும்பினேன். ஆனால் சென்னைக்கு வெளியில் படப்பிடிப்பு நடந்து வருவதால் என்னால் வரமுடியவில்லை.
நான் பெரும்பாலும் விழாக்களில் கலந்து கொள்வதில்லை. ஆனால், சமூக காரணங்களுக்காக இந்த விழாவில் நான் கலந்து கொள்ள விரும்பினேன். நான் வரமுடியாததற்கு இதயப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்நிறுவனம் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்' என்று நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் நடந்த இந்த விழாவில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் இந்த அமைப்பின் நல்லெண்ண தூதர் ஏ.ஆர்.ரெஹனா, ரெயின்ட்ராப்ஸ் நிறுவனத்தின் தலைவர் அரவிந்த் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com