இந்த ஒரு திரைப்படம் என் வாழ்க்கையையே மாற்றியது: நயன்தாராவின் நெகிழ்ச்சி பதிவு..!

  • IndiaGlitz, [Tuesday,October 22 2024]

நடிகை நயன்தாரா தமிழ் திரை உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் நிலையில், நானும் ரவுடி தான் படம் தனது திரையுலக வாழ்க்கையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் மாற்றியதாக கூறியுள்ளார். அவருடைய இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த நானும் ரௌடிதான் திரைப்படம் வெளியானது 9 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு, நயன்தாரா தனது இன்ஸ்டாவில் கூறியிருப்பதாவது:

என் வாழ்க்கையை ஆசீர்வதிக்கவும், மாற்றத்தை ஏற்படுத்தவும் வந்த படம் இதுதான். 9 வருடங்களுக்கு முன் ‘நானும் ரௌடிதான்’ ரிலீஸானது. மக்களிடமிருந்து புதிய அன்பைப் பெற்றேன். எப்போதும் இதை நான் மறக்கமாட்டேன். இந்த படத்தால் ஒரு நடிகையாக புதிய பாடங்களையும் அனுபவங்களையும், புதிய நினைவுகளையும் பெற்றேன்.

மேலும், எனக்கு ஒரு புதிய உறவும் கிடைத்தது. இந்த படத்தை கொடுத்த என்னவர், விக்னேஷ் சிவனுக்கு எனது நன்றி. இந்த சிறந்த படம், என்றும் என் நினைவில் தொடர்ந்திருக்கும். நினைவுகளுடன் சேகரித்து வைத்த புகைப்படங்களை உங்களுக்காக பகிர்கிறேன்,” என்று தெரிவித்து, ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

More News

காலை 6 மணிக்கே படப்பிடிப்புக்கு சென்ற மாளவிகா மோகனன்.. எந்த ஹீரோ படம்?

நடிகை மாளவிகா மோகனன் காலை 6:34 மணிக்கு பிரபல நடிகரின் படத்தில் நடிப்பதற்காக சென்றதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

சிம்புவின் கெட்டப்பை மாற்ற ஸ்பென்சர் பிளாசாவில் வாங்கிய பொருட்கள்: பட்டியல் போட்ட இயக்குனர்..!

சிம்புவின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவருடைய கெட்டப்பை மாற்றுவதற்காக சென்னை ஸ்பென்சர்

அஜித் குமார் ரேசிங் டீம் லோகோ ரிலீஸ்.. அணியின் முதன்மை ஓட்டுனர் யார் தெரியுமா?

நடிகர் அஜித் குமார் சமீபத்தில் ஒரு ரேசிங் டீம் உருவாக்கியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த டீமின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரிம் செய்யப்பட்ட 18 நிமிடங்களை சேர்த்து பார்க்கலாம்.. 'மெய்யழகன்' ஓடிடி ரிலீஸ் தேதி..!

கார்த்தி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன சில நாட்களில், 18 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஓடிடியில் ட்ரிம் செய்யப்பட்ட காட்சிகளையும் சேர்த்து பார்க்கலாம்

கனவு நனவாகிவிட்டது.. ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன ஷாலின் ஜோயா..

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனை நடிகை ஷாலின் ஜோயா காதலிப்பதாக கூறப்படும் நிலையில், சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நல்ல செய்தி பகிர்ந்ததையடுத்து, அவருக்கு ரசிகர்கள்