நள்ளிரவில் ஐஸ்க்ரீம் சாப்பிடும் நயன்தாரா..! சாலையோரத்தில் ஒரு ஜாலியான வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,April 05 2024]

நடிகை நயன்தாரா சாலை ஓரத்தில் நள்ளிரவில் ஐஸ்கிரீம் சாப்பிடும் வீடியோவையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் தற்போது கூட அவர் ’தி டெஸ்ட்’ உள்பட இரண்டு படத்தில் நடித்து பிசியாக இருக்கிறார் என்பதன் குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் கணவர் மற்றும் குழந்தைகள், இன்னொரு பக்கம் தனது அழகு சாதன பொருட்களின் பிசினஸ், மற்றொரு பக்கம் திரை உலகில் நடிப்பு என பிசியாக இருக்கும் நயன்தாரா அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சில ஜாலியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் நயனின் நண்பர்கள் நள்ளிரவில் சாலையின் எதிரில் இருக்கும் கடையில் நயன்தாரா நடித்த விளம்பரத்தை பார்த்துக் கொண்டே ஐஸ்கிரீம் சாப்பிடுகின்றனர். அப்போது அவர்களில் ஒருவர் ’உனக்கு நயன்தாராவை பார்க்க வேண்டும் போல் இருக்கிறதா? என்று கேட்க அவர் அருகில் உள்ள தோழி ’ஆமா’ என்று கூறுகிறார். அப்போது பக்கத்திலேயே நயன்தாரா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை காண்பிக்க, அந்த பெண் ஆச்சரியத்துடன் ’மேம்’ என்று நயன்தாராவை சுத்தி சுத்தி வருகிறார்

இவர்கள் இருவரும் நயன்தாராவின் நண்பர்கள் தான் என்றும் ரீல்ஸ் வீடியோவுக்காக இந்த ஜாலியான வீடியோவை உருவாக்கி உள்ளார்கள் என்றும் தெரிய வருகிறது. இருப்பினும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

அஜித்தின் 'விடாமுயற்சி' விபத்து வீடியோ.. ஐபிஎஸ் அதிகாரி சொன்ன அறிவுரை..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த விபத்து குறித்த வீடியோ நேற்று வெளியானது

'கடலோராம் வாங்கிய காத்து'... ரம்யா பாண்டியனின் வெட்கத்துடன் கூடிய பீச் வீடியோ..!

நடிகை ரம்யா பாண்டியன் சற்றுமுன் பீச் ஓரத்தில் காற்று வாங்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஜிவி பிரகாஷ் அடுத்த படத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வின்.. வேற லெவல் தகவல்..!

தமிழ் திரைப்படங்களில் அவ்வப்போது கிரிக்கெட் வீரர்கள் தலைகாட்டி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்

500 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் இசையமைக்கும் ஏஆர் ரஹ்மான்? படப்பிடிப்பு தொடக்கம்..!

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.

ரஷ்யாவுக்கு அல்ல.. திடீரென வேறொரு நாட்டிற்கு கிளம்பி சென்ற விஜய்.. 'கோட்' அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.