'காதம்மா' கேரக்டராகவே மாறிய நயன்தாரா.. விக்னேஷ் சிவன் கனவு நனவானதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவான ’நானும் ரௌடிதான்’ என்ற படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் காதம்பரி என இருக்கும் நிலையில், விஜய் சேதுபதி நயன்தாராவை ’காதும்மா’ என்று செல்லமாக அழைப்பார். அந்த கதாபாத்திரத்தை தற்போது நயன்தாரா நிஜமாக்கியுள்ள நிலையில், விக்னேஷ் சிவனின் கனவு நனவாகியிருக்கிறது என்று தெரிகிறது.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருப்பது மட்டுமின்றி, தற்போது கூட நான்கு படங்களில் நடித்து பிஸியாக உள்ளார் என்பதும் அறியப்படுகின்றது.
இந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் இணைந்த நயன்தாரா, தன் குடும்பத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் தனக்கு காது குத்திய வீடியோவை பகிர்ந்துள்ளார். தனக்கு பிடித்த தோடுகளை தேர்வு செய்து, அதன் பின்னர் கடை ஊழியர்களிடம் காது குத்திக் கொண்டார்.
காது குத்திய போது நயன்தாராவின் காதில் ரத்தம் வந்தபோது, விக்னேஷ் சிவன் எழுதிய "ரத்தமாரே" பாடலை பாடி, க்யூட்டான ரியாக்ஷன் கொடுத்தார். வலது காதில் இரண்டு தோடுகள் குத்திய நிலையில், நயன்தாரா மிகவும் க்யூட்டாக இருப்பதாகவும், ’நானும் ரௌடிதான்’ படத்தில் இடம்பெற்ற ’காதும்மா’ கேரக்டருக்கு இப்போதுதான் அவர் பொருத்தமாக இருக்கிறார் என்றும், விக்னேஷ் சிவனின் கனவு நனவாகி இருக்கிறது என்றும், இந்த வீடியோவுக்கு கமெண்ட்டுகள் பதிவாகி வருகிறது.
மேலும், நயன்தாரா தனது வீடியோவிற்கு ’காதும்மா’ என்ற கேப்ஷனும் சேர்த்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Yes lets say 🗣️
— Nayanthara✨ (@NayantharaU) September 24, 2024
“Wow what a ears” Kaadhuma ✨ pic.twitter.com/sFuIiEqc3a
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments