நயன்தாரா வீட்டு மொட்டை மாடியில் நனவாகிய கனவு.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,April 08 2024]

நடிகை நயன்தாரா தனது வீட்டின் மொட்டை மாடியில் புதிய அலுவலகத்தை கட்டி உள்ள நிலையில் தனது கனவு நனவாகியுள்ளதாக புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு திரைப்படத்திற்கு 10 கோடிக்கு அதிகமாக வாங்கி வரும் நிலையில் அவர் சென்னை உள்பட பல இடங்களில் ரியல் எஸ்டேட்டில் ஏராளமாக முதலீடு செய்து உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் ஒரு வீட்டை அவர் வாங்கியதாக கூறப்படும் நிலையில் அந்த வீட்டின் மொட்டை மாடியில் தற்போது அவர் ஒரு அலுவலகத்தை கட்டி முடித்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த அலுவலகத்தை கட்டி முடித்ததால் தனது கனவு நினைவாகியதாகவும் புதிய ஆரம்பம் தனக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த அலுவலகம் குறித்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது மாதவனுடன் ’தி டெஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுபோக சசிகுமாருடன் ஒரு படம் உள்பட இன்னும் இரண்டு படங்களில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'கோட்' நாயகியிடம் இத்தனை திறமைகள் ஒளிந்திருக்கிறதா? வேற லெவல் மீனாட்சி சவுத்ரி..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவரான மீனாட்சி சவுத்ரி ஏற்கனவே பல்வேறு சாதனைகள் புரிந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவரிடம்

'புஷ்பா 2' படத்தில் திடீரென இணைந்த ஆஸ்கார் நாயகன்.. நாளை ரசிகர்களுக்கு மாயாஜால  விருந்து..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' படத்தில் திடீரென ஆஸ்கார் நாயகன் இணைந்துள்ளதை அடுத்து நாளை வெளியாகும் ட்ரெய்லரில் அவரது மேஜிக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாக்கெட்டில் ஃபேன் வைத்த பிரபல நடிகை.. அடிக்கிற வெயிலுக்கு இது தேவைதான்..!

கோடை காலம் தொடங்கி விட்டதை அடுத்து தற்போது வெளியில் போயிட்டு வந்தவுடன் பேனில் தான் உட்கார வேண்டும் என்ற நிலை இருக்கும் நிலையில் பிரபல நடிகை ஒருவர்

'இந்தியன் 2' ரிலீஸ் தகவலை அடுத்து 'வேட்டையன்' ரிலீஸ் தகவல்.. லைகா அதிரடி அறிவிப்பு..!

லகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் நேற்று இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் இன்று அதே நிறுவனம் தயாரிப்பில்

மழையில் டான்ஸ்.. அந்தரத்தில் சாகசம்.. தர்ஷா குப்தாவின் கிளுகிளுப்பு வீடியோ..!

நடிகை தர்ஷா குப்தாவின் மழையில் நனையும் கிளுகிளுப்பு நடனம் மற்றும் அந்தரத்தில் நடந்து வரும் சாகசம் ஆகியவற்றின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.