சொந்த மாநில மக்களுக்கு நயன்தாரா செய்த மிகப்பெரிய உதவி

  • IndiaGlitz, [Friday,August 17 2018]

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நடிகை நயன்தாராவின் சொந்த மாநிலம் கேரளா என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கேரளாவில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு கோலிவுட் திரையுலகினர் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனது சொந்த மாநில மக்களின் துயரை துடைக்க நடிகை நயன்தாரா, கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை வழங்கியுள்ளார். இதற்கு நன்றி கூறி கேரள அரசு அனுப்பியுள்ள ரசீது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானபோதிலும் வெள்ளம் காரணமாக கேரளாவில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படம் அங்கு அடுத்த வாரம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானதை அடுத்து அவரது உடல் அவரது வீட்டிற்கு நேற்று எடுத்து செல்லப்பட்டது.

ஆகஸ்ட் 19ஆம் தேதி  சென்னையில் படப்பிடிப்புகள் ரத்து

இம்மாதம் 19ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறும் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கேரளாவில் பள்ளத்தில் சரிந்து விழும் பங்களா: அதிர்ச்சி வீடியோ

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அம்மாநிலமே ஸ்தபித்து போயுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தை விட அம்மாநில மக்களை அச்சுறுத்துவது நிலச்சரிவுதான்.

இயக்குனருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய யுவன்

கடந்த வாரம் வெளியான யுவன்ஷங்கர் ராஜாவின் 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு இளைஞர்களின் கூட்டம் அலைமோதுவதால்

மலையாள மீடியாக்களின் மனிதாபிமானம்

கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக வெளுத்து வாங்கும் கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது