இங்கே உண்மையான குற்றவாளி யார்? நயன்தாரா பட இயக்குனரின் ஆவேச கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் கேரளாவில் மந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் ஒருவர் பரிதாபமாக பலியான நிலையில் இந்த சம்பவத்தின் உண்மையான குற்றவாளி யார் என நயன்தாரா பட இயக்குனர் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் உள்ள ஒரு ஓட்டலில் மந்தி பிரியாணி சாப்பிட்ட 20 பேர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் நர்ஸ் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செய்தியின் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த நிலையில் மந்தி பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’15 ஆண்டுகளுக்கு முன்பே நான் எனது நண்பர் வாங்கி கொடுத்த ஷவர்மாவை சாப்பிட்டதால் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.. நான் மீண்டு வருவதற்கு என்னுடைய பெற்றோர் 70 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தார்கள். என் பெற்றோர்கள் எனக்காக பல பேரிடம் கெஞ்சிக்கூத்தாடி கடன் வாங்கி என்னை காப்பாற்றினார்கள்.
அதற்கு முழுமையான காரணம் நான் சாப்பிட்ட உணவு கெட்டுப்போனதே ஆகும். இதனால் எனக்கு எனது நண்பர் மீது கோபம் வந்தது. ஆனால் உண்மையான கோபம் யார் மீது வர வேண்டுமென்றால் அந்த ஓட்டல் கடை கடைக்காரர் மீது தான் வரவேண்டும். மீடியாக்கள் எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிர் விலை மதிப்பில்லாதது என்றும், எனவே தரமற்ற உணவுகளை சாப்பிடுவதில் இருந்து அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு வைரலாகி வருகிறது.
பிரேமம், நேரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான ’கோல்ட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பிரித்விராஜ், நயன்தாரா நடித்த இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout