'வேலுநாச்சியார்' படத்தில் நடிக்கின்றாரா நயன்தாரா? அதிகாரபூர்வ அறிக்கை!

  • IndiaGlitz, [Wednesday,December 30 2020]

ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரத்திற்காக போராடிய முதல் தமிழ் வீரமங்கை என்ற பெருமை பெற்ற வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தில் வேலுநாச்சியார் கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தகவல் வெளிவந்தது. சமீபத்தில் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளிவந்தபோதிலும் அதில் நயன்தாரா நடிக்கவிருப்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரபூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராணி வேலு நாச்சியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட பீரியட் படத்தில் .நயன்தாரா நடிப்பதாக சில செய்திகள் ஊடகங்களில் பரவி வருகின்றன. நயன்தாரா அந்த படத்தில் நடிப்பதாக வெளிவந்துள்ள தகவலை திட்டவட்டமாக மறுக்கிறார், மேலும் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் இதுபோன்ற செய்திகளை ஊடகங்கள் வெளியிடும்போது நயன்தாரா தரப்பில் உறுதி செய்து கொண்டு வெளியிடுமாறு கேட்டு கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதனையடுத்து ’வேலுநாச்சியார்’ படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அப்படியெனில் வேலுநாச்சியார் கேரக்டரில் நடிக்கும் நடிகை யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

அவர் தான் காரணம்: விஜே சித்ராவின் உதவியாளர் திடுக் தகவல்!

சமீபத்தில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புகழ் விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் சித்ராவிடம் உதவியாளராக இருந்த சலீம்

குளிருக்கு ஆல்கஹால் செட் ஆகாதா??? இந்திய வானிலையின் எச்சரிக்கை அறிவிப்பு!!!

குளிர்காலத்தில் கொஞ்சம் ஆல்கஹால் இருந்தாலே போதும் எனப் பரவலான கருத்து நிலவிவரும் சூழலில் அந்தக் கருத்து தவறானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

கண் புற்றுநோய்க்கு புது சிகிச்சை… இந்திய விஞ்ஞானிகளின் அசத்தல் சாதனை!!!

இந்தியாவின் பாபா அணுசக்தி மையம் கடந்த சில வருடங்களாக மக்களுக்குப் பயன்படும் பல புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்துள்ளது.

அதுவும் நடக்காம போச்சே: தந்தையான யோகிபாபுவின் ஜாலி கமெண்ட்!

கல்யாண சாப்பாடு தான் போட முடியவில்லை என்றால் சீமந்த சாப்பாடாவது போடலாம் என்று நினைத்தேன், ஆனால் அதுவும் நடக்காமல் போச்சு என்று நண்பர்களிடம் யோகி பாபு ஜாலியாக கமெண்ட் அடித்துள்ளார் 

மாலையும் கழுத்துமாக சரத்குமார்-ராதிகா: புகைப்படம் வைரல்

நடிகர் சரத்குமாருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவர் குணமானார்