ஹனிமூன் குறித்து நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9-ஆம் தேதி நடைபெறுவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உறவினர்கள் திருமணத்திற்கான பணிகளை கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது .

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா வெளிநாட்டுக்கு ஹனிமூன் செல்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஹனிமூன் இப்போதைக்கு வேண்டாம் என்று நயன்தாரா அதிரடியாக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது .

திருமணத்திற்குப் பின்னர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் கேரளா செல்ல இருப்பதாகவும் அங்கு நயன்தாரா புத்துணர்ச்சிக்காக சில ஆயுர்வேத சிகிச்சை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ’அஜித் 62’ படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியையும் கேரளாவிலேயே முடிக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

’அஜீத் 62’ படத்திற்கான பணிகள் அனைத்தையும் முடித்தவுடன், நயன்தாராவின் புத்துணர்ச்சி சிகிச்சை முடிந்தவுடன், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் வெளிநாட்டுக்கு ஹனிமூன் செல்வார்கள் என்றும், ஹனிமுன் முடிந்து திரும்பியவுடன் ‘அஜித் 62’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.