சமந்தாவை அடுத்து ஒரு பாடலுக்கு நடனமாடுகிறாரா நயன்தாரா? எந்த ஹீரோ படத்தில்?
- IndiaGlitz, [Monday,December 16 2024]
'புஷ்பா’ திரைப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடிய நிலையில், ஏற்கனவே பல ஹீரோயின்கள் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளனர். அந்த வகையில், தற்போது முதன்முதலாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிரபல ஹீரோ திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘தி ராஜா சாப். மீடியா பேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை மாருதி இயக்கி வருகிறார்.
ஃபேண்டசி மற்றும் ஹாரர் கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு நடிகை நயன்தாரா நடனமாட இருப்பதாகவும், இந்த பாடலின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல், நயன்தாரா ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. இப்படி ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தாலும் படக்குழுவினர் இதனை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
’தி ராஜா சாப்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.