நள்ளிரவில் படப்பிடிப்பின்போது வந்த குரல்.. நயன்தாராவின் க்யூட் ரியாக்சன்.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை நயன்தாரா நள்ளிரவில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது திடீரென தனது ரசிகர் இடம் இருந்து வந்த குரலை நோக்கி பார்த்த அவர் ’தூங்கு’ என்று ஸ்வீட்டாக கூடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாரா தற்போது ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ’டெஸ்ட்’ ’டாக்ஸிக்’ மற்றும் ’டியர் ஸ்டூடண்ட்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மலையாள திரைப்படமான ’டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நள்ளிரவில் நடந்த போது படப்பிடிப்பு நடந்த வீட்டின் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு சிறுவன் தனது வீட்டில் இருந்து நயன்தாராவை பெயர் சொல்லி அழைத்தார்.
உடனே நயன்தாரா ’இன்னும் தூங்கவில்லையா? தூங்கு’ என்று கூறினார். இதனால் உற்சாகமடைந்த சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நயன்தாரா ’சாப்பிட்டியா’ என்று கேட்டு ’தூங்கு’ என்று மறுபடியும் கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வருகிறது.
A cute boy calling #Nayanthara in shooting spot. She responded to her cute little fan. 🔥😍😍🤩🤩🤩
— Dreamer (@remaerdkihtraK) October 26, 2024
Very cute 😍😍#DearStudents #LadySuperstar pic.twitter.com/UiT0CBYqap
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments